சமீபத்தில் தி ஹிந்து ஆசிரியர் திரு. ராம் அவர்கள் இலங்கை சென்று அங்கே உள்ள நிலைமை பற்றி விரிவாக புகைப்படங்களுடன் எழுதி இருந்தார். அவர் கூற்றுப்படி அங்கு தமிழர்கள் முகாம்களில் இருந்தாலும் நல்லபடியாகவே இருசமீபத்தில் "தி ஹிந்து" ப்பதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ் வார இதழ்களில் முற்றிலும் மாறான செய்திகளே வருகின்றன. இவைகளில் வரும் செய்திகள் நமது மத்திய மாநில அரசுகளின் பார்வையில் படாமலா இருக்கும்? அப்படி இருந்துமா உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்?
தி ஹிந்து நாளிதழில் வந்த செய்தி குறித்து எனக்கு தெரிந்த வரை எந்த தமிழ் இதழும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் யாரும் இலங்கை சென்று அங்குள்ள நிலைமை குறித்து எழுதவில்லை. மனதை பதறவைக்கும் புகைப்படங்களுடன் எழுதுகிறார்களே தவிர, அந்த படங்களும் செய்திகளும் எப்போது யாரால் சேகரிக்கப்பட்டவை என்று குறிபிடுவதில்லை.
இந்த பிரச்சினை குறித்து பேசியவர்களும், போராட்டம் நடத்துபவர்களும் - என்னத்தை சொல்ல?
பேசி பேசி வீணாகும் பொதுஜன தமிழன் - அவனை அப்படியே வைத்திருக்கும் ஆளும் வர்க்கம்
என்று தணியும் எந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?